கொரோனா வைரஸ் இற்கு அடுத்ததாக சீனாவை தாக்கும் ஹண்டா வைரஸ்; ஒருவர் பலி

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. உலகளவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. 

சீனாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஹண்டா வைரஸ் பரவி வருகிறது. யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

எலி போன்ற கொறித்து தின்னும் வலுவான பற்களை உடைய பிராணிகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவுகிறது. இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்பது குறிப்பிடத்தக்கது. எலிகளின் கழிவுகள் வறண்டு போய் துசாக மாறும்.அந்த தூசியை சுவாசிக்கும் போது ஹன்டா வைரஸ் பரவும்.