(பாறுக் ஷிஹான்)
கல்முனை துளிர் கழகத்தினால் 100க்கும் அதிகமான குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக அத்தியவசியப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பாண்டிருப்பு நற்பிட்டினை சேனைக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு வியாழக்கிழமை(26) முற்பகல் கழகத்தலைவர் ம.றோகனின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
கொரோணாவினால் அன்றாட அத்தியாவசிய பொருட்கொள்வனவினை மேற்கொள்ள இயலாத நிலையில் இருந்த 100 குடும்பங்களுக்கு அப்பிரதேசத்தில் உள்ள துளிர் கழக அங்கத்தவர்களின் இனங்காட்டுதலில் குடும்பங்களின் தரவுகளோடு சமூக வலைத்தளங்கில் அறிவிக்கப்பட்டதன் படி கழக அங்கத்தவர்களையும் ஒன்றினைத்து கழகத்தலைவர் ம.றோகனின் தலைமையில் கள நடவடிக்கையின் கட்டம் கட்டமாக நிவாரண அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைக்கப்பட்டன.

















.jpg)

.webp)



.jpg)