ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா தொற்று இல்லை -வைத்தியர் எஸ். அகிலன் (MOH)




(வ.டினேஸ்)

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 2  கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என உண்மைக்கு புறம்பான செய்திகள் பரவியதனையடுத்து பிரதேச மக்களிடையே சற்று குழப்ப நிலை காணப்பட்டது. 

குறித்த விடையத்தினை உறுதி செய்யும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ். அகிலன்  அவர்களை தொடர்பு கொண்ட போது எமது செய்தி சேவைக்கு பின்வருமாறு விளக்கமளித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த 24ம் திகதி வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் யாரும் இனங்காணப்படவில்லை எனவும். பிரதேசத்தின் நிலமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்

மேலும் 37 பேர் வெளிநாட்டில் இருந்து வந்த காரணத்திற்காக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் குறித்த நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் வைத்திய சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் இருந்து வந்த காரணத்திற்காக பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளவர்களில் 6 பேர்  பரிசோதனைகள் நிறைவடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு தெரிவித்தார்.