மட்டக்களப்பில் இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபடும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயஉற்பத்தி தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள குடும்ப பெண்கள் தெரிவிக்கின்றனர்.


இயற்கை முறை விவசாய உற்பத்திகள் என்ற சுயதொழில் திட்டத்தின் கீழ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய உற்பத்தி தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுயஉற்பத்தி தொழிலில் ஈடுபடுகின்ற குடும்ப பெண்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்திற்கு அமைய வீட்டுக்குள் முடங்கிய நிலையில் தமது விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலையில் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் நேற்று முன் தினம் முதல் நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மாவட்டத்தின் இயற்கை முறை விவசாய உற்பத்திகள் என்ற சுயதொழில் திட்டத்தின் கீழ் பயிர்செய்யப்பட்ட தமது விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் வருகை குறைவாக காணப்படுவதனால் பொருட்களை விற்பனை செய்துகொள்ளமுடியாத நிலை காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.