சூடுபிடித்திருக்கும் சஜித் -ரணில் கட்சிக்கூட்டங்கள் இன்று!

(ஜே.எப்.காமிலா பேகம்)
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(29) மாலை கட்சித் தலைமையகமாகிய சிறிகொத்தவில் நடைபெறும்.

இதேவேளை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவும் அதன் தலைமையகத்தில், இன்று இடம்பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.