மலசலக் குழியில் விழுந்து மாணவி பலி!

(ஜே.எப்.காமிலா பேகம்)
கம்பஹா – தெல்கொட இசிங்கிலிகந்த பிரதேசத்தில் மலசலக் குழியில் விழுந்து 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது.

எம்பருலுவ பகுதியிலுள்ள பாடசாலையில் 7ஆம் தரத்தில் பயின்ற தக்சிலா தினூஸி என்கிற மாணவியே, இவ்வாறு உயிரிழந்திருப்பதாக மீகங்கவத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மலசலக் கூடத்தை மூடியிருந்த கொங்கறீட் வெடித்ததினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கின்றது.