ரஞ்ஜன் மீது சி.ஐ.டி இன்று விசாரணை:ஹரீனின் இல்லத்திலும் சோதனை !

(ஜே.எப்.காமிலா பேகம்)
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

பௌத்த மதத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் பேசினார் என்கிற குற்றச்சாட்டு அவர்மீது உள்ளது.

இதேவேளை, அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதிரடி சோதனைகளை நடத்தியிருக்கின்றனர்