மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஏலவிற்பனை!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று பாவனைக்கு உதவாத பொருட்கள் பகிரங்க ஏலவிற்பனை இன்று (25) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக வழாகத்தில் மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஏலவிற்பனையானது பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் வியாபாரிகள் அலுவலகர்கள் என பலரும் கலந்து கொண்டு பொருட்க்கள் கொள்வனவில் ஆர்வம் காட்டியதையும் அங்கு கானப்பட்ட அலுவலக பாவனைக்கு உதவாத பல பொருட்களை பொதுமக்களும் வியாபாரிகளும் கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

மாவட்ட செயலகத்தில் பல காலமாக அலுவலக கலஞ்சியசாலையில் கிடப்பில் கிடந்தவைகளை இன்று ஏலம் இடப்பட்டு பொருட்கள் யாவும் வெளியேற்றப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் நிதிப்பிரமாணங்கள், சுற்று நிருபங்களுக்கு அமைவாக இப் பகிரங்க ஏலவிற்பனை இடம்பெற்றது.