வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை நீக்க பேஸ்புக் நடவடிக்கை


சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இனவெறி, வன்முறையை தூண்டும் வகையில் இருக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் இது குறித்து பேஸ்புக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் சக்கர்பேர்க்(Mark Zuckerberg) வெளியிட்டுள்ள அறிக்கையில் “பேஸ்புக்கில் போலி செய்திகள், மிரட்டல்கள், தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வுகளைத் தூண்டும் பதிவுகள் ஆகியவை நீக்கப்படும்.

அத்துடன் போலியான கணக்குகள் மூலம் சமுதாயத்துக்கு சீர்கேடு விளைவிக்கும் பதிவுகளை இடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட பெரிய அரசியல் தலைவர்களும் பேஸ்புக் வரம்புக்கு உட்பட்டுதான் பதிவுகளை இடவேண்டும், அவர்களுக்கு எந்தவித சலுகையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.