மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் 47வது ஆண்டு நிறைவு நிகழ்வு

(லியோன்)
மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் 47வது ஆண்டு நிறைவு நிகழ்வும் 2020 -2021 ஆண்டுக்கான புதிய லயன்ஸ் கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வும் நேற்று(05) மட்டக்களப்பில் நடைபெற்றது.


இந் நிகழ்வு லயன்ஸ் கழக தலைவர் லயன் யு.ஆர்.மகேந்திரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக சிரேஷ்ட லயன் உறுப்பினர்களினால் கழக லயன் உறுப்பினர்களுக்கு மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .

இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வும் தொடர்ந்து புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் புதிய அங்கத்தவர்கள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்றது .

இதனை தொடர்ந்து புதிய லயன்ஸ் கழக தலைவராக லயன் கே.லோகேந்திரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட லயன்ஸ் கழக உறுப்பினர் லயன் டொன் பென்னெட் கமலத் மற்றும் முன்னாள் லயன்ஸ் கழக தலைவர்கள் , புதிய லயன் உறுப்பினர்கள், கழக பெண் லயன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது சிறந்த சமூக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்ற லயன் உறுப்பினர்களில் தெரிவு செய்யப்பட லயன் உறுப்பினர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.