வாழைச்சேனை மக்கள் வங்கி கிளையினால் சேமிப்பு மற்றும் முதலீட்டு கணக்கு கடன் திட்டங்கள் அறிமுகம்

 (ரூத் ருத்ரா)
அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைவாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் முகமாக மக்கள் வங்கி வாழைச்சேனை கிளையினால் அஸ்வென்ன சேமிப்பு மற்றும் முதலீட்டு கணக்கு கடன் திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

மக்கள் வங்கியின் 59 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாழைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் டி.தனசாகரன் தலைமையில் முறக்கொட்டான்சேனை தேவபுரத்தில் பிரதேச மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் மற்றும் குறைந்த வட்டியில் கடனுக்கான காசோலைகளும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்டத்தில் முதன் முறையாக மீனவர்களின் நலன் கருதி இவ் உதவிக் கடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்ளமுடியும் என முகாமையாளர் தெரிவித்தார்.

விவசாய,மீன் பிடி,கால்நடை பராமரிப்பு போன்றவற்றிக்கு இக் கணக்கின் ஊடாக பலன் பெற்றுக்கொள்ளமுடியும். இவ் நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் என்.சிறிஸ்காந்தா மற்றும் உதவி பிராந்திய முகாமையாளர் எஸ்.எம்.மோகனதாஸ் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.