இந்தியாவிலும் அமெரிக்கப் படைகள்!


(காமிலா பேகம்)
இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையிலான லடாக் பிரதேச எல்லை மோதல் விவகாரத்தில், சீனாவிடம் பாரிய நாசகாரத் திட்டம் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகில் பல்வேறு நாடுகளிடம் செயற்பட்டதைப் போன்று இந்தியாவிடமும் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறியுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை குற்றம் சுமத்தியுள்ளது.


மேலும் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையிலான மோதல் நிலைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இந்தியாவிற்கு ஆதரவாக இராணுவத்தை அனுப்புவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைகளில் ஏற்பட்டுள்ள மோதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், இரண்டு நாடுகளின் நிலைப்பாடுகளையும் விசாரித்து வருவதாக அமெரிக்கா மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் குறித்த இரு நாடுகளினதும் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை பின் தொடர்ந்து வருவதாகவும், இவ்விடயம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூடிய கவனம் எடுத்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.