தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மட்டக்களப்புக்கு விஜயம்

(லியோன்)
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இன்று மட்டக்களப்பு கல்லடியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணம் , மன்னார் ,கிளிநொச்சி , கொழும்பு ஆகிய மாவட்டங்களை தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் தேர்தல்கள் ஆணையாளர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இருக்கின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல்கள் ஆணையாளருக்கான உத்தியோக பூர்வ வாசஸ்தலம் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழுப்பின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் எச்.கூல், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம் எம் மொகமட், மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மாவட்ட சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் எம் என் .மெண்டிஸ், மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர்கள் , பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்

நிகழ்வினை தொடர்ந்து வாசஸ்தல வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.