வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் 200வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபவனி


(சிஹாரா லத்தீப்)
கிழக்கு மாகாணத்தின் முன்னணி மகளிர் உயர்தர பாடசாலையான மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் 2௦௦வது வருட பூர்த்தியை முன்னிட்டு குறித்த தேசிய பாடசாலையின் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று (25) கல்வி விழிப்புணர்வு ஊர்வலமொன்றினை மட்டக்களப்பு நகரில் நடாத்தினர். கல்லடி பாலத்தடியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நகர வீதிகளூடாக பயணித்து கல்லூரி வளவில் நிறைவுபெற்றது.

முன்னாள் அதிபர்கள், அபிவிருத்தி சங்க மற்றும் பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.