கரையோர சுத்தப்படுத்தல் தினத்தை முன்னிட்டு கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்றலில் உள்ள கடலோர கரையோர பகுதி சுத்தம் செய்யப்பட்டது

(எம்.என்.எம்.அப்ராஸ்)
கரையோர சுத்தப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல் சார் வளங்களை பாதுகாக்கும் வாரத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கடல்சார் சுத்தப்படுத்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய, கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்றலில் உள்ள கடலோர கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் நிகழ்வு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கடல்சார் சுற்றாடல் உத்தியோகத்தர் திரு கி.சிவகுமார் தலைமையில் இன்று(25) இடம்பெற்றது,

இவ் கரையோர சுத்தப்படுத்தல் நிகழ்வில் கல்முனை மாநகர சபை, கடற்படையினர், லயன்ஸ் கழகம் சிவில் பாதுகாப்பு பிரிவு, பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சுமார் ஒரு கிலோமீட்டர் அளவிலான கரையோரம் சுத்த சுத்தப்படுத்தப் பட்டது. மேலும் இதில் கடல்சார் மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.