சர்வதேச விஞ்ஞான தினத்தை முன்னிட்டு இணையவழியூடான ஒன்றுகூடல் - 2020

சர்வதேச விஞ்ஞான தினத்தை முன்னிட்டு 'தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவோம் (LET’S APPLY SCIENCE TO REBUILD THE NATION) எனும் தொனிப்பொருளில் தேசிய விஞ்ஞானக்கழகமானது (National Science Foundation) சர்வதேச மட்டத்தில் நடாத்துகின்ற இணையவழியூடான ஒன்றுகூடல் நிகழ்வு, 2020 நவம்பர் 20 ஆம் திகதி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை ணுழழஅ ஊடாக நடைபெறவுள்ளது.

எமது இளம் சமுதாயத்தினரையும், நாட்டையும் விஞ்ஞானத்தினூடாக கட்டியெழுப்பும் முகமாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன்; (Distinguish professor of physics, Director of Microphysics Laboratory,University of Illinois at Chicago CEO of three R & D company including Sivananthan Laboratory) பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். மற்றும் பேராசிரியர் ஜி. மிகுந்தன், பேராசிரியர் பி.ரவிராஜன், னுச.சீதா ஏரம்பேபொல ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

சிங்களம், மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வின் தமிழ் மொழியில் திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் எ.முகுந்தன், மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி மாணவன் வரதராஜன் சித்தசன் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் சூரியகுமாரன் துவாரகன் ஆகியோரும் தமது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சம்பந்தமான அனுபவங்கள் பற்றி சிறப்புரை ஆற்றவுள்ளனர். இந்நிகழ்வில் பார்வையாளர்களாக தரம் 9 இற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஏனையோர் கலந்து கொள்ள முடியும்.

இணைய விரும்பியவர்கள் கீழுள்ள அறிவித்தல்களைக் கவனிக்கவும். தொடர்புக்கு: maduka@nsf.gov.lk