சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சுனாமி குடியேற்ற கிராமமான பொலிவேரியன் கிராமத்தில் அத்துமீறி அரச காணியை அபகரித்தமை தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள 06 பேர் அத்துமீறி அரச காணியை பிடித்து வேலி போடப்பட்டமை தொடர்பில் தெரியவந்ததையிட்டு பிரதேச செயலாளரின் உத்தரவுக்கமைய சாய்ந்தமருது பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ஜே.எம்.ஹஸ்மி, கிராம உத்தியோகத்தர்களான எம்.எஸ்.இல்பான், ஏ.எம்.அஜ்ஹர் உள்ளிட்ட குழுவினர் கடந்த திங்கட்கிழமை மாலை கல்முனை பொலிஸாரின் உதவியுடன் குறித்த இடத்திற்கு சென்று காணியினை அபகரித்தவர்களிடமிருந்து விடுவித்ததுடன் அரச காணியை சட்டவிரோதமாக அபகரித்த 6 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4