சாய்ந்தமருது பிரதேசத்தில் டேங்கு ஒழிப்பும் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வும்

(நூருல் ஹுதா உமர்)
மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு அங்கமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத் அவர்களின் ஆலோசனையின் படி சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இன்று(25) காலை சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் டெங்கை கட்டுப்படுத்தல் மற்றும் டெங்கு நோய் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வும் கள ஆய்வும் சிரேஷ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எம்.முஹம்மட் பைசாலின் தலைமையில் டெங்கு கட்டுப்படுத்தல் கள உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையை சுற்றியுள்ள பிரதேசங்களில் கள ஆய்வுகள் செய்யப்பட்டு டெங்கு பரவும் இடங்கள் இல்லாதொழிக்கப்பட்டது.

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்திலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலும் டெங்கை கட்டுப்படுத்தல் மற்றும் டெங்கு நோய் தொடர்பிலான விழிப்புணர்வை உருவாக்க மாணவர்களின் சுகாதார கழகத்தை கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் மத்தியில் சிரேஷ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எம். முஹம்மட் பைசால் தெரிவித்தார்.