மட்டக்களப்பின் வாவியினை அபிவிருத்தி செய்வதனூடாக இயற்கை வளங்களைப் பாதுகாத்து பொருளாதாரத்தினையும் உயர்த்திட புதிய திட்டம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 
மட்டக்களப்பு வாவியினை அபிவிருத்தி செய்வதனூடாக இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன் விவசாயம், மின்பிடி உட்பட சுற்றுளாத் துறையினையும் மேம்படுத்தி மாவட்டத்தினதும் மாவட்ட மக்களினதும் பொருளாதாரத்தினை அதிகரிக்கச் செய்ய புதிய திட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாவி அபிவிருத்தி செய்தல் தொடர்பான கூட்டம் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இன்று(25) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட சம்மந்தப்பட்ட திணைக்கள உயர் அதிகாரிகள், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட சிரேஸ்ட விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

இவ்விசேட கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ஆசிரியர் எப்.சீ. ராகல், கிழக்குப் பல்கலைக்கழக புவியில் பீட தலைவர் கலாநிதி ஆர்.கிருபராஜா, ஹியூமெடிகா சர்வதேச தொண்டு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி டாக்கடர் டி.ஜி. பிருதிவிராஜ், சிரேஸ்ட ஆசிரியர் ரீ. ஜயசிங்கம், நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, சுற்றாடல் அதிகார சபை, நகர அபிவிருத்தி, மீன்பிடி போன்ற திணைக்கள உயர் அதிகாரிகள், விவசாய மற்றும் மீன்பிடி அமைப்புகள் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.