ஜனாதிபதி கடமைப்பொறுப்பேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளதையிட்டு மரக்கன்றுகள் நடும் பணி

(ஏறாவூர் நிருபர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைப்பொறுப்பேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளதையிட்டு பயன்தரும் மரக்கன்றுகள் நடும் பணிகள் மட்டக்களப்பு- ஏறாவூர் தாமரைக்கேணி பிரதேசத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் என்.எம்.எம். சுஐப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது ஹ{ஸைனியா பள்ளிவாயல் முன்றலில் சம்பிரதாயபூர்வமாக மா மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.