நிவார் புயல் மேலும் வலுப்பெற்றுள்ளது



வங்காள விரிகுடாவில் உருவான நிவார் புயல், மேலும் வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பலத்த மழை வீழ்ச்சி, கடுங்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஆகியன தொடர்பில் அபாய எச்சரிக்கை விடுத்துள்ள திணைக்களம், நிவார் புயல் காங்கேசன்துறை கடற்பிராந்தியத்திலிருந்து 230 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நிவார் புயலின் தாக்கத்தினால் வடக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (24) மாலை முதல் முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், மீனவர்கள் கடந்த 3 நாட்களாக கடற்தொழிலுக்கு செல்லவில்லை.