2020ஆம் ஆண்டில் சுவசெரிய 1990 அம்பியூலன்ஸ் சேவைக்கு மகத்தான வரவேற்பு! பயன்படுத்தியோர் அதிகம்!2020ஆம் ஆண்டில், சுவசெரிய 1990 அம்பியூலன்ஸ் சேவை, 335,629 நோயாளர்களை, வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளது என, சுவசெரிய சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி, சோஹன் டி அல்விஸ் தெரிவித்தார்.

இந்தச் சேவையின் கீ்ழ், நாடளாவிய ரீதியில் 297 அம்பியூலன்ஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருவதுடன், 1,400 ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான நோயாளர்கள், கொழும்பு மாவட்டத்திலேயே, இச்சேவையைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் இதற்குள், கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு இச்சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், 736,240 நோயாளர்களுக்கு சேவை வழங்கியுள்ளது.