ரஞ்சன் ராம நாயக்க எல்லை மீறி செயற்பட்டதாலேயே சிறைத்தண்டனை !



பாராளுமன்ற உறுப்பினராக இருந்துக்கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்க முடியாதென தெரிவித்துள்ள அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்பு,கடமை, மற்றும் எல்லை தொடர்பில் புரிந்து செயற்படுவது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, ரஞ்சன் ராமநாயக்க எல்லை மீறி செயற்பட்டதாலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

கண்டியில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

35 வருடமாக பாராளுமன்றத்தை அங்கம் வகிக்கும் தான், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு, அநாவசியமாக தலையிடவில்லை என்றும், அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவோருக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில்,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்கவும் சிறைத்தண்டனை அனுபவித்தார் என்றும் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.