18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையர்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்படும்


18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையர்கள் அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்படும். அதற்கான முன்மொழிவு ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளளார். .

ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்த திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இவ்வாறான திட்டங்களை அமுல்படுத்துவதன் ஊடாக உலகின் சில நாடுகள் சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவ பயிற்சி தொடர்பில் பொது மக்கள் அச்சமடையக் கூடாது. இந்த திட்டம் மக்களிடையே தலைமைத்துவ பண்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.