போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் களவெட்டிப் பொங்கல் விழா!(எஸ்.நவா)
தமிழர்களின் பாரம்பரியாக செய்யப்பட்டு வரும் களவெட்டிப் பொங்கல் விழா மட்டு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு முறைகளை எதிர்கால சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில் விவேகானந்தபுரம் நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து வேளான்மைகளை அறுவடை செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று பழனியர் வட்டை எனும் இடத்தில் அமைந்தள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆயிரம்கால் மண்டப ஆலயத்தில் எடுத்து செல்லப்பட்ட வேளான்மைகளை கம்புகளால் அடித்த அவிரி கட்டி தூர்த்தி நெல்லை வேறாக்கி உரலில் குத்தி பண்டைக் கால முறைக்கேற்ப பொங்கல் பொங்கி படைத்து பூசைகள் இடம்பெற்றிருந்தது.இதன் போது பழுகாமம் பாண்சாலி கலைக்கழகத்தின் கவியரங்கமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.