சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ செலவிற்காக உதவி வழங்கி வைப்பு


அக்கரைப்பற்று , ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தாயை இழந்த 34 வயது  பெண் ஒருவர் இரண்டு கிட்ணியும் பாதிக்கப்பட்டு  வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவருகின்றார்
 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை  வைத்தியர் ப.சுரந்தமுதன் , போரதீவினை சேர்ந்த சமூக சேவையாளர் எம்.கோபிநாத் , Battinews ஸ்தாபகர் இரா.சயனொளிபவன்  ஆகியோர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று  மருத்துவ செலவிற்காக   பிரான்ஸ் சக்கரவர்த்தி நற்பணி மன்றம் வழங்கிய 25,000 ரூபா காசோலையை வழங்கி வைத்தனர் 

தாயை இழந்த  நிலையில் 4 பிள்ளைகளுடன் வாடகைவீட்டில் வசித்து  வருகின்றனர். இவர்களுக்கு என ஒரு வீடு கட்டப்பட்டு முடியாத நிலையில் உள்ளது .  மலசல கூட வசதி இல்லாமல் இருந்தது . 
மலசல கூடம் ஒன்றை இவர்களுக்கு விரைவில் கட்டி கொடுப்பதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது