
(எஸ்.கார்த்திகேசு)
பொத்துவில் பிரதேசத்தில் 1870 இளம் தொழில் முயற்சி காணி கோரிய விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை
அரசாங்கத்தின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதற்கான காணிகளில் மூதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட விண்ணப்பதாரிகளின் தொழில் முயற்சி ஆற்றல்கள் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை இடம்பெற்று இருந்தன.
இந் நேர்முகப் பரீட்சையானது பொத்துவில் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (30) காணிப் பயன்பாட்டுப் அலுவலகர் ஞா.கலாரஞ்சனின் ஏற்பாட்டில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று இருந்தன.
இதன்போது பொத்துவில் பிரதேசத்தில் இருந்து 1870 இளைஞர் யுவதிகள் விண்ணப்பித்து இருந்ததுடன் 4697 விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பிதழ் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.
அரசானது இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக காணிப் பயன்பாட்டு கொள்ளை திட்டமிடல் திணைக்களம் இவ் வேலைத் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றன.
இந்நேர்முகப் பரீட்சையினை பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜனூஸ் காணிப்பிரிவு சிரேஸ்ட முகாமைத்துவ உதவியாளர் அப்துல் வாசீத் காணிப் பயன்பாட்டு அலுவலகர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேர்முகப் பரீட்சையினை மேற்கொண்டு வருகின்றனர்.