மட்டக்களப்பில் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 


இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக பொத்துவில் முதல் பொதலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) காலை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பித்தார்.


அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் கடந்த 28ஆம் திகதி முதல் நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்  சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இவர்களுடன், அரச தலைவர்கள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பலர் இணைந்துகொண்ட நிலையில், இன்று 4ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.