கிழக்கு மாகாணம் வழமைக்கு திரும்பியது!



( வி.ரி.சகாதேவராஜா)
கடந்த மூன்று தின முடக்கலையடுத்து நேற்று(17) திங்கட்கிழமை கிழக்கு மாகாணம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

கடைகள் திறக்கப்பட்டு வாகனங்கள் வீதியில் தாராளமாகப் பயணித்தன. அரச அலுவலகங்கள் சட்டதிட்டத்திற்கமைவாக குறைந்தளவு அலுவலர்களுடன் இயங்கின.

அடையாளஅட்டையுடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியெறலாமென அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. 

இருந்தபோதிலும் பெரும்பாலானோர் வீதிகளில் நடமாடியதைக்காணமுடிந்தது. சில இடங்களில் படையின் பொலிசார் அடையாள அட்டையை பரீசீலித்ததையும் காணமுடிந்தது.

இதேவேளை சம்மாந்துறையில் சுகாதாரத்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.