(வி.ரி.சகாதேவராஜா)
ஈழ வள நாட்டின் மட்டக்களப்பு நகருக்கும் கல்முனை நகருக்கும் 12 கல் மைல் மத்தியில் அமைந்துள்ள அழகிய பழம் பெரும் பதியே செட்டிபாளையம் கிராமமாகும். 1870 காலப்பகுதியில் கிறிஸ்தவ மிசனெறிப் பாடசாலைகளுக்கு எதிராகத் தமிழர் தம் பண்பாட்டையும் கலாசார மரபுகளையும் அழியவிடாது பாதுகாக்கும் நோக்கோடு; கூழன் உபாத்தியாயர் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை அவர்கள் திண்ணைப்பள்ளிக்கூடத்தை நடாத்தி வந்தார்.
இவரிடம் கற்றுத் தேர்ந்தவர்களே ஈழத்தின் இரட்டைப் புலவர்கள் என அழைக்கப்படும் வரகவி சின்னவப் புலவரும் இ. வ கணபதிப்பிள்ளை புலவருமாகும். இத் திண்ணைப் பள்ளியில் வேத புராண இதிகாச ஜோதிடம் மருத்துவம் என்பன போதிக்கப்பட்டன. கூழன் உபாத்தியாரின் பின் 1884 காலப்பகுதியில் வாழ்ந்த அவரது மாணவன் இ. வ கணபதிப்பிள்ளைப் புலவர் அவர்களும் திண்ணைப் பள்ளிக் கூடம் நடாத்தி செட்டிபாளையத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்காலப்பகுதியில் செட்டிபாளையம், குருக்கள்மடம் கிராம பெரியோர்கள் இணைந்து செட்டிபாளையம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலுள்ள காணியில் உருவாக்கிய ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி நடவடிக்கைகள் இடம் பெற்று வந்து. இத் திண்ணைப் பாடசாலை 1872 ஆனிமாதம் 15 ஆந் திகதி வணக்கத்திற்குரிய 'பெஞ்சமின் கிளவ்' அவர்களால் மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அரசாங்க அதிபர் ற.ற.கியூம் இப்பிரதேச நீதி அரசர் திரு வேதிங்டன் ஜோர்ச் ஏர்சைன் போன்றவர்ளும் கலந்து சிறப்பித்தனர்.
1940களில் ஏற்பட்ட கல்லிச்சவால்களுக்கு தீர்வு காணும் முகமாக 1946ம் ஆண்டு யூன் 1ம் திகதி செட்டிபாளையம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது எமது கிராமத்தின் முற்போக்காளர்களான வே.முதலித்தம்பி, அக்ராயர் மூ.கந்தையா முதலானோர் இணைந்து உருவாக்கினர். 32 மாணவர்களுடன் இப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 75 வருடங்கள் கடந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கும் கல்விக் கூடமாகச் செயற்பட்டு வருகின்றது. அயற் கிராமங்களான குருக்கள்மடத்தில் மெதடிஸ்தமிசன் பாடசாலையும், மாங்காட்டில் றோமன் கத்தோலிக்க பாடசாலையும் இயங்கி வந்த வேளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற தனித்துவத்தோடு இப்பாடசாலை செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பாடசாலையின் முதலாவது அதிபராகவும் ஆசிரியராகவும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த சி.எஸ். பாக்கியன் அவர்கள் பணியாற்றினார். இவரது முயற்சியால் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அரச உதவி பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குருக்கள்மடம், மாங்காடு போன்ற பாடசாலைகளில் கல்வி கற்ற பல மாணவர்கள் இப் பாடசாலையில் இணைந்து கொண்டனர்.

இவ்வாறு இணைந்துகொண்டவர்களில் வே.தட்சணாமூர்த்தி, ஏ.சுப்பிரமணியம் ஆகிய இருவரும் பாடசாலையில் S.S.C பரீட்சைக்கு தோற்றி முதல் தடைவையில் சித்தி பெற்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்த க.முத்துலிங்கம் அவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்று முதன் முதலில் 1950 இல் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றார்.
இப் பாடசாலையில் கற்ற ஓய்வு நிலை மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் திரு வே.அரசரெத்தினம் 1959 இல் தேசிய ரீதியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று அப்போது 40 ரூபா பணப்பரிசையும் தட்டிக் கொண்டு சாதனை படைத்தார். இவர் கிராமத்தின் முதலாவது பட்டதாரியாவார். மேலும் 1964 வருடம் ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற விஞ்ஞான வித்தியா அபிவிருத்தி புலமைப்பரிசில் பரீட்சையில் க. பேரின்பராஜா அவர்கள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்தார்.
இவர் தற்போது பிரபல சட்டத்தரணியாகவும் பதில் நீதவானாகவும் கடமையாற்றி வருகின்றார். இவர் தாம் கல்வி கற்ற பாடசாலையில் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த இரண்டு தசாப்தங்களிற்கு மேலாக புலமைப் பரிசில் ஒன்றை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கல்லூரியின் மாணவரான த. ஆறுமுகம் அவர்கள் 1966 ஆம் ஆண்டு தேசிய உயரம் பாய்தல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று இப்பாடசாலையின் முதலாவது தேசிய மட்ட வீரனாவார். அதனைத் தொடர்ந்து யாழ் மகாஜனக் கல்லுரியில் 1968 இல் நடைபெற்ற மாணவர்களுக்கான தேசிய விவசாய அறிவுப் போட்டியில் இக்கல்லூரியின் சார்பாக ஓய்வுபெற்ற இ.செ.ம.பணிப்பாளர் பொன்.செல்வநாயகம்,ஓய்வுநிலை அதிபர் பொ.சந்திரபோஸ் , ஆசிரியர் சே. சரவணமுத்து ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.

செட்டிபாளையம் பாடசாலையில் 1975 இல் க.பொ.த உயர் தரத்திற்கான கலைத் துறை ஆரம்பிக்கப்படதோடு இக்கல்லூரி மகாவித்தியாலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது. இப் பாடசாலையில் 1978 இல் உயர்தரம் வரை கல்வி கற்று முதன் முதலாக செ. தில்லையம்மா, வ. ஜிவநாதன் ஆகியோர் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செயப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவதாண்டில் 13 மாணவர்கள் பல்கலைக் கழகம் சென்று சாதனை படைத்தார்கள். செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தின் கல்விப்புலப் புரட்சியில். க.செந்தில்நாயகம் ஆசிரியர்களது பங்களிப்பு போற்றத்தக்கது. செந்தில்நாயகம் ஆசிரியர் தமிழ், பொருளியல், குடியியல் ஆகிய பாடங்களை உயர் தர வகுப்புக்களுக்குக் கற்பித்த பல் துறை விற்பன்னர்.
இவரின் கற்பித்தல் விளைவாக செட்டிபாளையம் கிராமம் மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டமே கலைத்துறையில் தன்னிறைவு கண்டது என்றால் மிகையாகாது. இவரது மகத்தான கல்விச்சேவையின் ஞாபகார்த்தமாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் முதன்மைச் சித்தி பெறுவோருக்கு செந்தில்நாயகம் நினைவுப் புலமைப்பரிசில் திட்டமொன்றைத் தொடர்ச்சியாக அவரது மாணவர் கலாநிதி சி.அமலநாதன் வழங்கி வருகின்றார்.
கல்வியில் மட்டுமன்றி இணைப் பாடவிதானச் செயற்பாடுகளிலும் இலங்கையில் தடம் பதித்த பாடசாலையாக செட்டிபாளையம் ம.வி விளங்கி வருவது கண்கூடு. 2012 ஆம் ஆண்டில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 63 மாணவர்கள் இக்கல்லூயில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதோடு மாகாண மட்டத்தில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம் பெறுவதற்கும் இக்கல்லூரியின் பங்களிப்பே அடிப்படையாக அமைந்திருந்தது.
மாகாண மட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுள் 27 மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்பட்டமையும் வரலாற்றுச் சாதனையாகும். தேசிய மட்டத்தில் பங்கேற்ற செல்வி பே. கோமுகி என்ற மாணவி 2010 இல் தடைதாண்டல் போட்டியில் 2ம் இடத்தையும் 2011 , 2013 களில் 2ஆம் 3ஆம் இடங்களைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்தார்.
அவ்வாறே இக்காலத்தில் சமூக விஞ்ஞான தேசிய மட்டப் போட்டியில் சு. வேணுகோபன் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்தார். அத்தோடு 2015, 2017 ஆம் ஆண்டுகளில் நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு குழு நிலைப் போட்டிகளில் மாணவர்கள் தேசிய மட்டத்தில் மூன்றாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுச் சாதனை படைத்தனர்.
செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தின் கல்வி நிருவாகப் பின்புல வளர்ச்சியில் அதிபர்களாகச் செயற்பட்ட முதல் அதிபர் கே.எஸ்.பாக்கியன், மற்றும் வே.லிங்கநாதன், கா.செந்தில்நாயகம், சி.குமாரசுவாமி, பொ.அரவிந்தபோஸ், த. அருள்ராசா, எஸ். தம்பிராசா, பி. இரவீந்திரன் (பிரதி அதிபர்) மற்றும் தற்போதைய அதிபர் த.சிறிதரன் ஆகியோரின் அர்ப்பணிப்புடனான பங்களிப்பு கல்லூரியின் பல்வேறு மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுள் வே.லிங்கநாதன் அதிபர் அவர்கள் கடமையாற்றிய 1972–1985 காலப்பகுதியில் பாடசாலை பல்துறைகளிலும் அபிவிருத்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்காலப்பகுதியில் பாடசாலைக்கான சின்னம் அதிபர் தலைமையில் உருவாக்கப்பட்டது இச் சின்னத்தை இங்கு ஆசிரியராக கடமையாற்றிய சி.சபாரெத்தினம் அவர்கள் வடிவமைத்தார். அத்தோடு பாடசாலைக் கீதமும் விஸ்வலிங்கம் பண்டிதரால் எழுத்துருவாக்கப்பட்டது.

இவ்வாறு வே.லிங்கநாதன் அவர்களின் அயரா முயற்சியினால் 1974 இல் பாடசாலையில் க.பொ.த.(உ/த) கலைப் பிரிவு ஆரம்பிக்கப்படதோடு மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடம் எனப் பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டன.
இக்கல்லூரி 1988 இல் கொத்தணி முதன்மைப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டதோடு. களுதாவளை ,தேத்தாத்தீவு, மாங்காடு ,செட்டிபாளையம் ,குருக்கள்மடம் ,கிரான்குளம், அம்பிளாந்துறை ஆகிய பாடசாலைகளை நெறிப்படுத்தும் கொத்தணிப் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதன் உருவாக்கத்தில் அப்போதைய பிரதி அதிபர் திரு கா.செந்தில்நாயகம், சிரேஸ்டசட்டத்தரணி திரு ஆ.மு பேரின்பராசா ஆகியோரின் பங்களிப்பு மேலானதாக கணப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வாறு இப்பிரதேசத்தில் முதன்மை நிலையில் இருந்த செட்டிபாளையம் ம.வி 1978 ஆம் ஆண்டு சூறாவளியுடன் தரைமட்டமாகப்பட்டதுடன் 1990 இல் இராணுவம் முகாமிட்டதைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இக்காலத்தில் எஸ். தம்பிராசா அதிபரினதும், கிராம மக்களினதும் பெரும் பங்களிப்போடு வீடுகள் மீண்டும் திண்ணைப்பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்டன.
இக் காலத்தின் தொடர்ச்சியான இடப் பெயர்வுகள் காரணமாக மாணவர் அடைவு மட்டங்களில் சற்றுத் தளர்வு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆயினும் பாடசாலைச் சமூகத்தினதும் கிராம மக்களினதும் பாரிய ஒத்துழைப்புடன் எமது பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடையுறாது முன்னெடுக்கப்பட்டு வந்தமை பாடசாலை பெறுபேற்று வெளியீடுகளிலிருந்த அறிய முடியும்.
ஆதனைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் காரணமாக பாடசாலை உட்கட்டமைப்பு வசதி மீண்டுமொரு அழிவைக் கண்டது. ஆக்காலத்தில் அதிபராக இருந்த த.அருள்ராசா மற்றும் பழைய மாணவரும் ஆசிரியருமான வெ.கோபாலப்பிள்ளை ஆகிய இருவரினதும் அயராது பங்களிப்பினுடனும் கிராம மக்கள் கல்வி அதிகாரியின் ஒத்துழைப்புடனும் பாடசாலைப் பகுதீக வளங்கள் மீளமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலையின் அபிவிருத்திப் பாதையில் 2018ன் பின்னரான காலப்பகுதில் ஒரு துரித வளர்ச்சி காணப்பட்டது இக்காலத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளராக கிராமிய வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் மேலதிக செயலாளரான திரு.சி.பாஸ்கரன் அவர்களும் பழைய மாணவர் சங்க செயலாளராக பின்தங்கி கிராமிய அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சி.அமலநாதன் அவர்களும் பொறுப்பேற்றனர்.

இக்கால கட்டத்தில் அதிபராக கடமையாற்றிய திரு.பி.ரவீந்திரன் அவர்களின் தலமைத்துவத்துடன் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதி , கல்வி அபிவிருத்தி என்பவற்றில் பாரிய அபிவிருத்தி ஏற்படுத்தப்பட்டது.
அத்தோடு உயர்தர விஞ்ஞானப்பிரிவு 2018ல் ஆரம்பிக்கப்பட்டு 1AB பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டது. இதற்காகா பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் போசகர் கௌரவ பா.உ. கோ.கருணாகரன் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உபதலைவர் மாகாணச் செயலாளர் மூ.கோபாலரெத்தினம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான ஓய்வுநிலை மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன் , உதவிக்கல்விப் பணிப்பாளர் ந.குகதாசன், ஆசிரிய ஆலோசகர் மலர்தேவி குருபரன், ஆசிரியர் மு.பாலகிருஸ்ணன் ஆகியோரின் பெறுமதிமிக்க பங்களிப்பு பாராட்டத்தக்கது.
ஆத்தோடு 2019ம் ஆண்டு பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழையமாணவர் சங்கம் என்பவற்றின் ஒத்துழைப்புடன் இப்பாடசாலையின் பழைய மாணவரும் அப்போதைய நிதியமைச்சின் மேலதிகப் பணிப்பாளர்நாயகம்; இருந்த திரு மூ. கோபாலரெத்தினத்தின் தீவிர முயற்சியினால் 2019இல் தொழில்நுட்பப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அன்றுமுதல் செட்டிபாளையம் ம.வி 1 AB பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. பாடசாலையின் பௌதீக வளங்களும் விருத்தியடைந்தன. ஒன்றுகூடல் மண்டபத்திற்கான தளபாடங்கள்; விஞ்ஞான ஆய்வுகூடம் சுற்றுமதில் போன்ற பல்வேறு வளத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டது.
இப்பாடசாலையில் 2020 இல் க.பொ.த(உ/த)ப் பரீட்சையில் கணிதம் மற்றும் விஞ்ஞானத் துறைகளில் முதல் தடவையாகத் தோற்றிய சி.சர்மிளா என்ற மாணவி வைத்தியத் துறைக்கும் க.விருபாசன் என்னும் மாணவன் பொறியியல் துறைக்கும் தெரிவாகி உள்ளதோடு பல மாணவர்கள் கணித விஞ்ஞாத் துறைக்கான பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளமை கல்வி வரலாற்றில் பாரிய மாற்றமாகும். கணித, விஞ்ஞான, தொழில்நுட்பத் துறை சார்ந்து ஏற்பட்ட இப்பரிணாம வளர்ச்சி மாணவர்களின் நகர்ப்புற நகர்வுக்கு தீர்வாக அமையும் என்பதில் எவ் வித சந்தேகமும் இல்லை.
இவ்வாறாக அமைச்சின் செயலாளர்கள் , மேலதிக செயலாளர்கள் ,அரசியல் தலமைத்துவங்கள், பணிப்பாளர் நாயகம், கல்வி நிருவாக சேவையாளர்கள், கணக்காளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் வைத்தியர்கள் , பொறியியலாளர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பல்துறை அரச உத்தியோகத்தர்கள், தனியார் தொழில்துறைசார் விற்பனர்கள், சுயதொழில் விற்பனர்கள் முதலான மனிதவளப்பேறாக்கத்திற்கு 75 வருடகால அரப்பணிப்போடு சேவை செய்த அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வித்திணைக்கள அதிகாரிகள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவச்சங்கத்தின் பங்காளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் இந்த 75ஆவது ஆண்டு பவள விழாவில் நினைவு கூருவதில் செட்டிபாளையம் கல்விச் சமூகம் பெருமை கொள்கிறது.