மட்டக்களப்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் ! நடந்தது என்ன !


நானும் நன்பணுமான பாலேந்திரனும் முச்சக்கரவண்டியில் வீதியால் சென்ற போது எங்களை அழைத்து நான் யார் என்று தெரியுமா? நான் யாரு என்று தெரியுமா ? என துப்பாக்கியை எடுத்ததும் தான் வெடிச்சது எனது நண்பன் கீழேவிழுந்தான்” என முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழந்தவரின் நண்பனுமான விஜயராஜா தெரிவித்தார் .



இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் நேற்று திங்கட் கிழமை மாலை ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தியதில் மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்தவருடன் இருந்த முச்சக்கரவண்டி சாரதியும் அவருடைய நண்பருமான விஜயராஜா இன்று செவ்வாய்கிழமை (22) இவ்வாறு தெரிவித்தார்.

உயிரிழந்த பாலசுந்தரமும் அவரது நண்பரும் சம்பவதினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள மென்ரசா வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக சந்தித்து மீண்டும் முச்சக்கரவண்டியில் திரும்பும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றில் குறித்த மெய்ப்பாதுகால இருந்துள்ளார். இதன்போது அவரை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு பாலசுந்தரம் தன்னை கோரிய நிலையில் குறித்த நண்பர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இருந்தபோதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்பி எடுங்கோ அழைப்பதாக தெரிவித்து கதைத்துவிட்டு போவோம் என தெரிவித்த நிலையில் முச்சக்கரவண்டியை திருப்பிகொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது வீதிக்கு வந்த மெய்பாதுகாவலர் நண்பனிடம் “என்னடா கைகாட்டிச் சென்ற நீ “என அதற்கு நண்பன் நீ யார் என்றார் அப்போது மெய்பாதுகாவலர் இதை கேட்க நீயார் என இருவருக்கும் வாய்தர்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து மெய்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டுபோனபோதும் நான் யாரு என்று தெரியுமா பொலிஸ் என துப்பாகியை மெய்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே வீழ்ந்து இரத்தம் வெளியேவந்தது அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன் என விஜயராஜா தெரிவித்துள்ளார்.

அதேவேளை நண்பன் முன்று தினங்களுக்கு முன்னர் மெய்பாதுகாவர் உடன் பிரச்சனை நடந்திருக்கின்றது எனக்கு அதுபற்றி தெரியாது என தெரிவித்துள்ளார்.