இலங்கையில் சிசு பிறப்பு வீதம் வீழ்ச்சி ! - சுகாதார இராஜாங்க அமைச்சர்



கொரோனா தொற்றுக் காரணமாக, இலங்கையில் சிசு பிறப்பு வீதம் சடுதியாகக் குறைவடைந்துள்ளதாக தேசிய மருத்துவ சுதேச மருத்துவ ஊக்குவிப்பு மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் வளர்ச்சி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், திருமணங்கள் இடம்பெறாமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடாந்தம் இலங்கையில் 350,000 சிசுக்கள் பிறக்கும் நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களாக இத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டில் பெரிதளவில் திருமணங்கள் இடம்பெறாமையால், சிசு பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.