மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை காலை 8.00 மணி தொடக்கம் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் அனைத்து 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை தங்களது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினை தொடர்புகொண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.