மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன அபிவிருத்தி திட்டத்திற்கென அரசாங்கத்தினால் 430 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

(வரதன்)

கடந்த 10 வருடங்களிற்கு பின்பு மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன அபிவிருத்தி திட்டத்திற்கென அரசாங்கத்தினால் 430 மில்லியன் ரூபா நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 வருடத்திற்காக விவசாய அபிவருத்தியை கருத்திற் கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்.இதில் 60 வீதமான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டத்தில் உள்ள நீர்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கத்தினால் நெல்லின் நிர்ணய விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சேதனப் பசளை வேலைதிட்டத்தை அமுல்படுத்த சகல விவசாயிகளும் உதவ வேண்டுமென மட்டு மாவட்ட பிரதேச மட்டத்திலான பெரும்போக செய்கைக்கான அபிவிருத்தி திட்ட கலந்துரையாடல் பட்டிப்பளை இடம்பெற்ற போது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை கருணாகரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.