மாலைத்தீவிற்கு மணல் ஏற்றுமதி செய்யப்பட்டமைக்கான காரணம்மாலைத்தீவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு தேவையான வர்த்தக ரீதியிலான மணல் தொகை மாத்திரம் ஏற்றுமதி செய்யப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

அதற்காக 8 க்யுப் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், க்யுப் ஒன்றுக்கு 180,000 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் அறவிடப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில் மாலைத்தீவில் புதிய தீவு ஒன்றை நிரப்புவதற்காக இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.