இலங்கையின் கொரோனா திரிபு; உலக நாடுகளில் பரவல்


இலங்கையில் அதிகமாக கொரோனா வைரஸ் டெல்டா இனத்தின் உப வகையான வைரஸ் திரிபு பரவலாக காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தத் திரிபுக்கு AY-28 என்று பெயரிடப்பட்டது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் மருத்துவர் சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்ட இந்தத் திரிபு தற்போது மூன்று உலக நாடுகளில் பரவலாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் 8%, இந்தியாவில் 4% மற்றும் ரஷ்யாவில் 3 வீதமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.