திருகோணமலை - கந்தளாய், பேராற்றுவெளி பகுதியில் வயல் நிலங்கள் தீக்கிரைதிருகோணமலை - கந்தளாய், பேராற்றுவெளி பகுதியில், இன்று (13) காலை, அறுவடை செய்த வயல் நிலங்களுக்கு, இனந்தெரியாதோர் தீ மூட்டியுள்ளனர்.

இதனால், அந்தப் பகுதி, புகை மண்டலமாக காணப்படுவதோடு, திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியில் பயணம் செய்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்துடன், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கும் சிறுவர்களும் கைக்குழந்தைகளை வைத்திருப்போரும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.