நாவலப்பிட்டி நகரில் அடித்துக்கொண்ட ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்கள்நாவலப்பிட்டி நகரிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை பகல் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நகர சபை உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர்களும் மோதிக் கொண்ட சம்பவத்தால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

மைதானம் ஒன்று இருக்கத்தக்க, அதனை அண்மித்த பகுதியில் நடைபயிற்சி பாதை அமைப்பதற்கு பொதுஜன முன்னணி நடவடிக்கை எடுக்க, அதனை எதிர்த்த உறுப்பினர்களால் இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது.

சிறிதுநேரம் பொலிஸார் அங்கு வந்த போதிலும் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.