பண்டிகைக்கு முன் பூஸ்டரை பெற்றுங்கள்



60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பண்டிகைக் காலத்துக்கு முன்னதாக ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கல்லூரிகளுக்கிடையேயான குழுவுடன் இணைந்து இலங்கை மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை மருத்துவ சங்கத்தால் நேற்று (07) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் மூத்த குடிமக்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசியின் முதல் 2 டோஸ்களை பூர்த்தி செய்யாதோரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிகமாக, முன்னணி பணியாளர்கள் பூஸ்டர் டோஸுடன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை மற்றும் புத்தாண்டுக் காலங்களில் கூடும் கூட்டங்களில் அதிக தொற்று ஏற்படும் அபாயம் மற்றும் கொரோனாவின் ஒமிக்ரான் மாறுபாட்டின் சாத்தியமான பரவல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே மருந்துவ சங்கம் இவற்றைப் பரிந்துரைப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.