தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்


அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது மேலும் குறைவடையும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதேசயம், இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.