3.3 மில்லியன் குடும்பங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு!


நிதி சிக்கல்களை எதிர்நோக்கும் 3.3 மில்லியன் குடும்பங்களுக்கு இம்மாதத்திலிருந்து அடுத்த 6 மாதங்களுக்கு 5,000 வழங்கப்படும் என பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக வங்கி (WB) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியன இதற்கான நிதியை வழங்கும் என அமைச்சின் செயலாளரான நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.