ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல் நடைபெறும்
கிழக்கு ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய  கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல இவ் வாரம் ஐந்து நாட்களும் நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வாரி புள்ளநாயகம் தெரிவித்தார். 

ஏற்கனவே நாளை பாடசாலை இல்லை என அறிவித்தல் வெளியாகியிருந்தது 
ஆனால் மீண்டும் ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.