மட்டக்களப்பு மாவட்ட மரணவிசாரணை அதிகாரிகளுக்கான எரிபொருள் விநியோகம் உறுதிப்படுதப்படவேண்டும் !



(மண்டூர் ஷமி)

மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள் தங்களின் கடமைகளை உரிய நேரங்களில் செய்து முடிப்பதற்கு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் சிரமமில்லாமல் பெற்றுக்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துத்தரவேண்டும் என்று மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் இணைப்பாளரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான எம்.எஸ்.எம்.நசீர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் நாங்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெறவேண்டியுள்ளது. இதனால் மாவட்டத்தில் இடம்பெறும் திடீர் மரணங்களை சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை செய்து உறவினர்களிடம் பிரேதங்களை கையளிப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே எங்களது கடமைகளை சிரமங்கள் இன்றி செய்வதற்கு வரிசையில் நிண்டு எரிபொருளை பெறாமல் மாவட்டத்தில் உள்ள (7) திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்குமான எரிபொருளை அனைத்து நிரிபொருள் நிலையங்களில் பெறுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் பற்றி மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவித்தார்.