வெள்ளை மணல் பாலர் பாடசாலைக்கு ஒலி அமைப்பு வழங்கி வைப்பு


(ரவ்பீக் பாயிஸ்)

வெள்ளை மணல் பாலர் பாடசாலைக்கு ஒலி அமைப்பு தொகுதி வழங்கிவைக்கப்பட்டது.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க வெள்ளை மணல் பாலர் பாடசாலைக்கான பிள்ளைகளின் விளையாட்டு செயற்பாடுகளுக்கு ஒலி அமைப்பு தொகுதி பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகமட் நௌபர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் பெற்றார்கள் கோரிக்கைக்கு அமைய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒலி அமைப்பு தொகுதி பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகமட் நௌபர் அவர்களினால் குறித்த பாலர் பாடசாலையின் ஆசிரியையிடம் கையளிக்கப்பட்டது.