மட்டக்களப்பு புதிய சிறைச்சாலை அத்தியட்சகர் பிரபாகரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


(சிஹாரா லத்தீப் )

மட்டக்களப்பு சிறைச்சாலையில் அத்தியட்சகராக கடமையாற்றிய எஸ்.எல்.விஜயசேகர இடமாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர் புதிய சிறைச்சாலை அத்தியட்சகராக நல்லையா பிராபாகரன் இலங்கை சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய சிறைச்சாலை அத்தியட்சகராக நல்லையா பிரபாகரன் இன்று நண்பகல்  12 மணியளவில் தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பதில் அத்தியட்சகர்கே.வர்ணகுலசூரிய , பிரதம ஜெயிலர்.எஸ்.மோகன் ராஜ் உள்ளிட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிரதம ஜெயிலராக கடமையாற்றிய இவர் அதே ஆண்டில் சுப்பர் கிரோட்டில் சித்தியடைந்து பதவியுயர்வு பெற்று 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் பிரதம ஜெயிலராக கடமையாற்றியுள்ளார்.

அதன் பின்னர் சிரேஸ்ட தரத்தை சேர்ந்த இவர் 2020 ஆண்டு இலங்கையில் பெரிய சிறைச்சாலையான தும்பாறை மற்றும் போகம்பர ஆகிய சிறைச்சாலைகளில் உதவி அத்தியட்சகராக கடமையாற்றிய பின்னர் 2021 களில் வவுனியா சிறைச்சாலையில் உதவி அத்தியட்சகராக கடமையாற்றிவந்த நிலையில் இன்று 12.08.2022 திகதி முதல் மட்டக்களப்பு சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.