ஆசிரியர் திருமதி. டிஸ்மலர் - சிவகணேசமூர்த்தி அவர்கள் ஆசிரியப் பணியில் ஓய்வு

(சித்தா)

1988 ஆம் ஆண்டில் ஆசிரியப் பணியில் இணைந்து கொண்ட திருமதி. டிஸ்மலர் - சிவகணேசமூர்த்தி அவர்கள் மட்/பட்/களுதாவளைப் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வித்தியாலத்தில் இருந்து 05.08.2022 இல் இருந்து 34 வருடச் சேவைக்காலத்துடன் ஓய்வு பெறுகின்றார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரையான கல்வியினை மட்/பட்/செட்டிபாளைய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப்பட்டதாரியுமாவார். அத்துடன் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமாவினையும் பூரத்தி செய்து தனது ஆசிரியத் தொழிலுக்கான பூரண தகமையினையும் பெற்றுக் கொண்டார்.

ஆரம்ப நியமனத்தை மட்/பட்/செட்டிபாளைய மகா வித்தியாலயத்தில் பெற்றுக் கொண்ட இவர் மட்/பட்/ஓந்தாச்சிமடம் சிறி விநாயகர் வித்தியாயலம், மட்/பட்/கோவில்போரதீவு விவேகாநந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக கடமையாற்றி தனது பணியில் சிறந்த ஆசிரியர் எனும் நாமத்துடன் இன்று ஓய்வு பெறுகின்றார்.

பாடசாலைக் காலத்தில் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களையும், பாராட்டுக்களையும் தனதாக்கிக் கொண்டார். இவ் அனுபவத்தின் வாயிலாக மாணவர்களிடம் விளையாட்டு, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், கலை கலாசார நிகழ்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்தி பாடசாலைக்கு நற்புகழையும் பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் கல்விச் சமூகத்தின் பாராட்டுதலுக்குமுரியவரானார்.