மட்டக்களப்பு புளியந்தீவு பேராலய திருவிழா!(சிஹாரா லத்தீப் )
கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புளியந்தீவு புனித விண்ணேற்பு மாதா பேராலயத்தின் 214 வது வருடாந்த திருவிழா மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை யி ன் பெருவிழா கூட்டுத் திருப்பலியுடன் நேற்று காலை நிறைவு பெற்றது.

கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இப்பேராலயத்தின் வருடாந்த திருவிழா இப் பேராலயத்தின் பங்குத்தந்தை வணக்கத்துக் குரிஜோர்ச் ஜீவராஜ் அடிகளாரின் தலைமையில் நவ நாட் கிரியைகள் இடம்பெற்று திருவிழாவின் சிறப்பு நிகழ்வான மரியன்னையின் திருச் சொரூப பவனி நேற்று முன்தின மாலை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை மறைமாவட்ட ஆயர் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது ஆயரின் பெரு நாள் கூட்டு திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்க நிகழ்வு இடம் பெற்றதுடன் இந்த பெருவிழா இனிதே நிறைவு பெற்றது.

இப்பெருவிழாவில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பெருமளவு கத்தோலிக்க பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். நாட்டுக்கு நல்ல ஆசி ,நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி அகலவும் , இனங்களுக்கு இடையில் நல்லுறவு, கிறிஸ்தவ மக்களின் ஈடேற்றம் வேண்டியும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளும் இங்கு ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நடைபெற்றன .