03 தசாப்தங்களின் பின் திருமலை துறைமுகத்தின் ஏற்றுமதி நடவடிக்கைகள் ஆரம்பம் ; கனிய மணல் சீனாவுக்கு ஏற்றுமதி



சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் திருகோணமலை துறைமுகம் தனது ஏற்றுமதி நடவடிக்கைகளை ஆரம்பித் துள்ளது.

புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலைத் துறைமுகத்தின் ஏற்றுமதி நடவடிக்கைகள் எழுபதுகளின் இறுதிப் பாதிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில், அதன் ஏற்றுமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, இறக்குமதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர், புல்மோட்டை கடலில் நங்கூரமிட்டிருந்த டெல்டா ஸ்டார் கப்பல் வெடி வைத்து மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து, திருகோண மலையிலிருந்து பெருமளவிலான கனிய மணல் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.



எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப் பாட்டுக்கு நிவர்த்தியாகவும், திருகோணமலை துறைமுகத்தின் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கிலும் திருகோணமலை துறைமுகத்தினால் ஏற்றுமதி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தயாரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தின் வதிவிட முகாமை யாளர் சமன் பெரேராவும் இது குறித்து கருத்துத் தெரிவித்தார்.