நண்பனின் A.T.M அட்டையை திருடியவருக்கு பிணை !
வேலனை பகுதியில் நண்பனின் ஏ.டி.எம் அட்டையினை திருடி 30,000 ரூபாய் பணத்தினை திருட்டுத்தனமாக பெற்ற சந்தேகநபரை 50,000 ரூபாய் பிணையில் செல்ல ஊர்காவற்துறை நீதவான் அனுமதி அளித்தார்.
மேலும் வழக்கு எதிர்வரும் ஐப்பசி மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலனைத் துறையூர் பகுதி சேர்ந்த 21 வயது இளைஞன் மதுபானம் வாங்குவதற்காக , தனது நண்பனின் கடன் அட்டையினை திருடி பணத்தினை பெற்றுள்ளார்.
பணத்திணை இழந்த நபர் ஊர் காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரை ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் முற்படுத்திய போது அவர் தனது குற்றத்தினை ஒப்புக் கொண்டார். வழக்கினை ஆராய்ந்த நீதவான் 50,000 பெறுமதியான ஆட்பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.