பாக்கிஸ்தான் மருந்து உற்பத்தி நிறுவனமான சீ.சீ.சீ. கம்பனி இலங்கை மக்களுக்கு உதவி !



(அஷ்ரப் ஏ சமத்)
பாக்கிஸ்தான் மருந்து உற்பத்தி நிறுவனமான சீ.சீ.சீ. கம்பனி மனிதபிமான உதவியை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது.

இவ் மருந்து உற்பத்திகளை பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகா் பாக்கிஸ்தான் கம்பனிக்கு அறிவுறுத்தியதன் பயனாக இலங்கையில் கடந்த காலமாக பொருளாதார நெருக்கடியில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவியதை சுட்டிக்காட்டியிருந்தாா். 

பாக்கிஸ்தான் நாடு பாரிய வெள்ளத்தினால் 1500 பாக்கிஸ்தானியா் இழந்துள்ள சந்தர்பத்தில் இலங்கைக்கு மருந்துப் பொருட்களை கையளிப்பது பாராட்டத்தக்கதாகும்.

இலங்கையில் சிறுநீர் நோய்க்கான மருந்துப் பொருட்களை ஜக்கிய நாடுகள் அமையத்தின் 2030 வரையிலான சஸ்டைநெபில் கோல் திட்டத்தின் கீழ் சீ.சீ.சசீ நிறுவனம் இத்திட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது.

இவ் வைபவத்தில் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் மேஜர் ஜெனரரல் ஓய்வு உமர் பாருக் புர்க்கி, மற்றும் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் ஆலயத்தின் வர்த்தகம் முதலீடு சம்பந்தமான செயலாளா் அஸ்மா கமால், ஆகியோர் பங்கு பற்றுதலுடன் சீ.சீ.சீ கம்பனியின் இலங்கையின் பணிப்பாளா் விராஜ் மனதுங்க, மற்றும் தக்ராப், ஆகியோா் இணைந்து சுகாதார அமைச்சா் கலாநிதி கெகிலிய ரம்புக்வெலவிடம் 19ஆம் திகதி சுகாதார அமைச்சில் வைத்து கையளித்தனா்.

இங்கு உரையாற்றிய பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் இலங்கை அண்மையில் பாக்கிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்காக ஒரு தொகுதி தேயிலையை அன்பளிப்பு செய்தது. இருந்தும் அங்கு தற்போதைய நிலையில் மேலதிகமான தேயிலை தேவைப்படுகின்றது. .எனவும் கூறினாா்.